திடீர் ட்விஸ்ட்… விஜய்க்கு ஆதரவு தெரிவித்த முக்கிய அரசியல் புள்ளி… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!

By Nanthini on ஐப்பசி 27, 2025

Spread the love

கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்து இருந்த நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தன. ஆனால் ஒரு மாதம் கடந்தும் விஜய் மக்களை நேரில் சந்திக்காமல் இருந்த நிலையில் பல விமர்சனங்கள் எழுந்தது.

பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு நேரில் சென்றால் மீண்டும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் சென்னை மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து விஜய் இன்று ஆறுதல் தெரிவித்தார்.

   

அதேசமயம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்வதாக விஜய் உறுதி அளித்திருந்தார். இதனிடையே கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரம் அனைத்து விஜய் ஆறுதல் தெரிவித்ததற்கு பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். கரூர் சென்றால் விஜய்க்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் மாமல்லபுரத்திற்கு அழைத்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருக்குமோ என்று அச்சத்தில் விஜய் இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். விஜய்க்கு தற்போது அவர் ஆதரவாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.