கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்திற்கு வரவழைத்து மண்டபத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டு இன்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், நடிகர் விஜய் மிகுந்த வேதனையுடன் மன்னிப்பு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களின் வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி என அனைத்து செலவுகளையும் தான் ஏற்றுக்கொளவதாகவும் அவர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
