இதெல்லாம் நாகரீகமா..? பனையூர் பண்ணையார் தனம் வேண்டாம்… விஜய்க்கு எதிராக TVK தொண்டர்கள்…? பின்னணி என்ன..??

By Soundarya on ஐப்பசி 26, 2025

Spread the love

அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதேசமயம் கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் களமிறங்கியுள்ளார்.

இதற்கிடையில் கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினரையும் நேரில் அழைத்து வந்து மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் விஜய் தங்க வைக்கவுள்ளார். அங்கு, ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் அவர்களை வரவழைத்து துக்கம் விசாரிப்பது என்பது எந்த வகையில் நாகரிகம்?” என தவெக தொண்டர்களே தலைமையை எதிர்த்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளார்களாம். பனையூர் பண்ணையார் தனம் வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்கள்.