விஜய் தொலைக்காட்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஒன்றாக இருப்பது பிக் பாஸ். தற்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் முடியும் முன் நந்தினி என்னால் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறி வெளியேறிவிட்டார். அவரை தொடர்ந்து பிரவீன் வெளியேறினார். கடந்த வாரம் அப்சரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் பேசும் ஆபாச பேச்சுக்கள் நடந்து கொள்ளும் விதங்களை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சீரியல் நடிகை லட்சுமி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் பிக் பாஸ் சீசன் 9 பற்றி தான் பேசப்போகிறேன். கேவலத்தின் உச்சகட்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது .உங்கள் வீட்டு குழந்தைகள் இதையெல்லாம் பாக்குறாங்களா? இல்லையா? இந்த ஷோவை ஒளிபரப்பி என்ன சாதிக்க போறீங்க? அதுல வர காசை வைத்து எப்படி சாப்பிடுறீங்க? நீங்க உள்ளே வைத்து இருக்க போட்டியாளர்கள் எல்லாம் நாத்தம் அடிக்கிற குப்பைங்க. அவர்களை வெளியே போட்டுட்டு அந்த இடத்தை சுத்தம் பண்ணி விடுங்.க இவ்வளவு அசிங்கம் நடக்குது எங்க போனீங்க? அசிங்கமா பேசுறவங்களை கண்ட்ரோல் பண்ணுங்க விஜய் சேதுபதி சார்” என்று தெரிவித்துள்ளார்.
