சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகத்தில் தற்போது பரவி வரும் அந்த வீடியோவில், உயரமான கட்டிடத்தின் மேலிருந்து குழந்தைக்கு கீழே விழுவது போன்ற காட்சி தெரிகிறது. அப்போது தாயின் அலறல் சத்தம் கேட்க தொலைவில் நடந்து வந்திருந்த நபர் ஒருவர் அவசர அவசரமாக செயல்படுகின்றார்.
அவர் தனது கையில் இருந்த காபி கப்பை உடனே தூக்கி எறிந்து விட்டு மேலிருந்து கீழே விழும் குழந்தையை காப்பாற்ற கைகளை நீட்டுகின்றார். அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை அவருடைய கையில் பத்திரமாக விழுந்தது. பிறகு அவர் மேலே பார்த்து ஒருவரிடம் பேசுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் சீனாவின் ஹாங்காங்கில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு உண்மையானதா என்று உறுதி செய்ய இயலாத போதும் மனிதநேயத்தையும் தைரியத்தையும் பிரதிபலிக்கும் இந்த காட்சி இணையத்தில் பலரையும் பதற வைத்துள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
