தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த எட்டுபுளிக்காடு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றன. இதனிடையே அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் நேற்று 3.50 மணி அளவில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் பாஸ்கர் (53) என்ற ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவி வீட்டுக்கு சென்றதும் இது பற்றி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு போன் மூலமாக புகார் தெரிவித்தனர்.
பிறகு பள்ளி முன்பு மற்ற மாணவ மாணவிகளுடன் அவரவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாணவி மட்டுமல்லாமல் அந்த பள்ளியில் பயிலும் 15 மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புகார் அளித்த மாணவியின் தந்தை ஆசிரியரை, உன் மூஞ்சியை உடைச்சிடுவேன் என்று மிரட்டியது மேலும் பரபரப்பை கிளப்பியது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெற்றோர்களிடம் சமாதானம் பேசி அங்கிருந்து கூட்டத்தை கலைத்தனர். பிறகு குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர் என்ற ஆசிரியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 55 வயது உடைய ஒரு நபர் செய்யும் செயலா இது, பிஞ்சு குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்த இவரை வேலையை விட்டு உடனடியாக நீக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 53 வயது உடைய ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
