“அவளே போய்ட்டா, இந்த உசுரு எனக்கு எதுக்கு”… சாலை விபத்தில் உயிரிழந்த காதலி… கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த வேப்பூர் அருகே உள்ள பிஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவருடைய மகன் நரேன் கார்த்தி (20). இவர் கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் இவருடைய தாய் ராஜகுமாரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனிடையே நரேன் கார்த்திக்கும் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் காதல் வந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் அவருடைய காதலை கடந்த 21ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நரேன் கார்த்தி கோவையிலிருந்து ஊருக்கு புறப்பட்டு வந்துள்ளார். தன்னுடைய காதலை உயிரிழந்த துக்கத்தில் இருந்த அவர் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை மீட்டு குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.