மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் வாடா தாலுக்கா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் வசித்து வருகின்றார். இதனிடையே இரவு நேரத்தில் அந்தப் பெண் கணவர் இல்லாமல் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது பெண்ணுக்குத் தெரிந்த நபர் ஒருவர் வீட்டுக்குள் வந்தார். அவர் அந்தப் பெண்ணை அவருடைய கணவர் கூப்பிடுவதாக கூறி ஊர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது மற்றொரு நபரும் அங்கு வந்த நிலையில் இருவரும் திடீரென அந்த பெண்ணை அங்கிருந்து அடர்ந்த காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று மாறி மாறி வன்கொடுமை செய்துள்ளனர். இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் அந்த பெண் அலறி துடித்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
