பெரும் அதிர்ச்சி..! இரத்தசோகை நோய்க்காக இரத்தமாற்று சிகிச்சை… 5 குழந்தைகளுக்கு பரவிய HIV தொற்று…!!

By Soundarya on ஐப்பசி 26, 2025

Spread the love

ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்காக இரத்த மாற்று சிகிச்சை செய்த 5 குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தொற்று பரவியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த மருத்துவக் குழு, மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் தலைமையகமான சாய்பாசா மருத்துவமனைக்கு சென்று, இரத்த வங்கியில் சோதனை நடத்தியுள்ளார்கள்.

அங்கு 25 யூனிட் இரத்தம் செலுத்தப்பட்டது குறித்தும், இரத்த தானம் வழங்கியவர்களின் விவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது  பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.