வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் Montha புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் 790 கிமீ தொலைவில் புயல் சின்னம் இருக்கிறது. மேலும், 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல் சின்னம், திடீர் திருப்பமாக 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர தொடங்கியுள்ளது.
