ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அனியானது மூன்று போட்டிகள் கொன்ற ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சிட்னியில் இன்று நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 38.3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். விராட் கோலி அரை சதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த ஒரு நாள் தொடர் தான் ரோகித்- விராட் கோலியின் கடைசி தொடராக இருக்கும் என்று அவர்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில் கடைசி போட்டியில் அந்த விமர்சனங்களை சுக்கு நூறாக உடைத்து விட்டார்கள்.
ரோஹித் 121 ரன்களை விளாசியுள்ளார். இதே சிட்னியில் தான், அவர் ஃபார்மில் இல்லை என கூறி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5-வது போட்டியின் போது வெளியே உட்கார வைக்கப்பட்டார். அதே இடத்தில் இன்று விமர்சனங்களை அடித்து நொறுக்கி வெற்றி வாகை சூடியுள்ளார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
