சிவகங்கை கோயில் காவலாளியான அஜித் குமார் கொலை வழக்கில் தற்போது பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்குமாரை போலீஸ் தாக்கிய வீடியோவை வெளியிட்ட அவரது நண்பன் சக்தீஸ்வரனை கொலை செய்ய முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கெனவே காவல் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், மதுரையில் அவர் சென்ற வாகனம் மீது மற்றொரு வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்த்துறை விசாரித்து வருகிறது.
