சமூக வலைத்தளத்தில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேற்படி ரிப்பன் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், பள்ளிக்குச் சென்ற சிறுமி பயணம் செய்த ஆட்டோவின் கதவு திறந்திருந்ததால் திடீரென்று கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று குழந்தையை காப்பாற்றினர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகி இருந்த நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் சிறுமி சறுக்கி விழும் தருணமும் உடனே உதவி செய்யும் மக்களின் செயல்பாடும் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் பயணிக்கும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
வயநாடு அருகே ஆட்டோவில் இருந்து விழுந்த குழந்தை – நல்வாய்ப்பாக காயங்கள் இன்றி பத்திரமாக மீட்பு#SunNews | #Kerala | #CCTV pic.twitter.com/XQcqennRhe
— Sun News (@sunnewstamil) October 25, 2025
