“குஷியோ குஷி”… மகளிருக்கு மாதம் ரூ.2,000.. தமிழக அரசு அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 25, 2025

Spread the love

தமிழகத்தில் மருத்துவச் சான்றிதழ் படிப்புகளில் சேரும் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கார்டியோ சோனோகிராபி டெக்னீசியன், ECI / ட்ரெட்மில் டெக்னீசியன் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளில் சேர்ப்பவர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் வெற்றி நிச்சயம் ஆகிய திட்டங்களின் மூலம் பணம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் நவம்பர் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.