தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்து வந்தனர். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத குடும்பங்களின் அதிருப்தியை குறைக்கும் நோக்கத்தில், அரசு தற்போது பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக புதிதாக சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த விண்ணப்பதாரர்களில் வருமான வரி செலுத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற தகுதியுள்ள பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்தபடி இந்த புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் வேலூர், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவடைந்துவிட்டது. அதே நேரம் இந்த மாவட்டங்களில் நவம்பர் 14ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதனிடையே வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
