தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் அதிமுக இந்த முறையும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்காக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றது.
இப்படியான நிலையில் 2026 இல் கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக யாரை நிறுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே சைதை துரைசாமி, JCD பிரபாகர், ஆதி ராஜாராமை ஸ்டாலினுக்கு எதிராக நிறுத்தி தோற்றுப் போன அதிமுக, இந்த முறை வலுவான வேட்பாளரை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஸ்டாலினின் முன்னாள் விசுவாசியும் புரசைவாக்கம் முன்னாள் திமுக எம்எல்ஏவுமான vs பாபுவை கொளத்தூரில் நிறுத்துவதற்கு இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
