பிரபல நடிகரான அஜித் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி 240 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. சினிமா ஒருபுறம் இருந்தாலும் அஜித் கார் ரேசிங்கில் பிஸியாக உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்த படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.
இந்த படம் தொடங்கும் முன்னர் அஜித் தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் உடன் பாலக்காட்டில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அஜித்தின் நெஞ்சில் சாமி உருவத்தை பச்சை குத்தியுள்ளார். அது அவரது குலதெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மனின் உருவம். அவர் சாமி மீது கொண்ட பக்தி இதன் மூலம் வெளிப்படுகிறது.
