தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் மாற்றுக் கட்சியினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் எந்த பெரிய திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டால் சுமார் 120 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. ஒருவேளை விஜய் ஏதாவது ஒரு வலுவான கட்சியுடன் கூட்டணி வைத்தால் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கணிப்பு பாரம்பரிய திராவிட கட்சிகளின் வாக்கு வங்கியை ஒட்டுமொத்தமாக சிதைக்க கூடும் என்றும் கூறுகின்றனர்.
