“திண்ணையில் கிடந்தவனுக்கு வந்த வாழ்க்கை…” கிண்டலாக கமெண்ட் செய்த நபர்…. நடிகர் சூரியின் கூல் ரிப்ளை….!!

By Devi Ramu on ஐப்பசி 24, 2025

Spread the love

காமெடியனாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் சூரி விடுதலை, கருடன், மாமன் போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். வினோத் ராஜ் இயக்கிய கொட்டு காளி திரைப்படம் சூரியின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது. சமீபத்தில் சூரி தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அவர் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன் ஜாலியாக தீபாவளியை கொண்டாடினார்.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் “திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்கின்னு வந்துச்சாம் வாழ்க்கை” என கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த சூரி திண்ணையில் இல்லை நண்பா. பல நாட்களும் இரவுகளும் ரோட்டில் தான் இருந்தவன் நான். அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையில் உண்மையையும் மதிப்பையும் கற்றுக் கொடுத்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினால் வெற்றி நிச்சயம் உன்னை தேடி வரும்” என நாகரிகமாக பதில் அளித்துள்ளார்.