தென் மாவட்டங்களில் ஆயிரம் கோடி கனிம வள கொல்லையில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக கூறி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் மட்டும் ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக கனிம வள கொள்ளை நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தொடர்ந்து இது நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் அதில் சம்பந்தப்பட்ட கனிம வளம் கொள்ளையர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கனிம கொள்ளையர்களை பாதுகாத்து வருவதும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் வேறு எந்த பகுதிகளும் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் தான் மிக அதிக எண்ணிக்கையில் உரிமம் பெற்ற குவாரிகளும் சட்டவிரோத குவாரிகளும் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து அவை சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்படுகின்றன. இந்த கனிமவள கொல்லையில் ஆளும் கட்சிக்கு தொடர்பு உள்ளதாகவும் இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தினால் அது நியாயமாக இருக்காது என்றும் அன்புமணி கூறியுள்ளார். எனவே தென் மாவட்டங்களில் நடந்த கனிம வள கொள்ளை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளது புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
