கனமழை அலெர்ட்: அனைத்து மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

By Soundarya on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், தீவிர பாதிப்புள்ள நோயாளிகள், பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை மருத்துவமனையில் சேர்க்க அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தடையில்லாமல் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவும், ஜெனரேட்டர்களை பழுதின்றி பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.