இன்றைய காலகட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பலமுறை உணர்த்தும் விதமாக பல நாடுகளில் சோக சம்பவங்களும் விபத்துகளும் நடைபெறுகின்றன. அப்படிதான் ஆப்பிரிக்க கண்டத்தில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உகாண்டாவின் தலைநகர் காம்பாலாவிலிருந்து வடக்கு நகரமான குலு நோக்கி சென்ற ஹைவேயில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
கார் ஒன்றை முந்தி செல்ல முயன்ற பேருந்து எதிர்பாராத விதமாக எதிரில் வந்த மற்றொரு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 63 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை கண்டதும் மீட்பு படையினர் திக்கு முக்காடி போனார்கள். மீட்பு பணி தொடர்ந்து நடந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி படரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
