உத்திரபிரதேச மாநிலம் பல்லியாவில் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 16 வயது சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அந்தச் சிறுவன் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அக்டோபர் 11 ஆம் தேதி தனது பயிற்சி வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்தபோது சிறுமி கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சிறுவனும், சிறுமியும் ஒரே பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
