கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஆலங்கோடு கண்ணோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (49) என்ற கட்டிட தொழிலாளிக்கு அகிலா (47) சென்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இதனிடையே ராஜேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திங்கள் சந்தைக்கு சென்று விட்டு திரும்பி அவர் தான் வாங்கி வந்த ஒரு மது பாட்டிலை வீட்டில் உள்ள பீரோவில் மறைத்து வைத்துள்ளார். இதனைப் பார்த்து அவருடைய மகள் பாட்டிலை எடுத்து வெளியே வந்து மதுவை கீழே ஊற்றியுள்ளார்.
இதனால் மணமுடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
