ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை… புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு…. அரசு வெளியிட்ட புதிய தகவல்…!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பலருடைய விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தற்போது பலரும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி முதல் பணம் கிடைக்கும் என அரசு ஏற்கனவே அறிவித்தது. இதனைத் தொடர்ந்து முகாம்களில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் அடுத்த வாரத்தில் இருந்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்கள், செல்போன் எண், ஆதார், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட உள்ளன.

   

அதேசமயம் உங்களுடைய மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்றால் நிராகரிப்புக்கான காரணம் குறித்து போனுக்கு மெசேஜ் அனுப்பப்படும். அந்த காரணம் ஏற்புடையதல்ல என்று நீங்கள் நினைத்தால் மீண்டும் மேல் முறையீடு செய்யலாம். அந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளின் உரிமை தொகை திட்டத்தில் தகுதியானவர்கள் இணைந்து கொள்ளலாம்.