தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மௌனிகா. கடந்த 2015 ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மௌனிகாவுக்கு அஜய் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
சுரேஷ் பணத்திற்காக தனது மனைவியை அடித்து துன்புறுத்தியாதால் மௌனிகா தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். சம்பவம் நடந்த அன்று மௌனிகா 15 வயாகரா மாத்திரைகளை மட்டன் குழம்பில் கலந்து சுரேஷுக்கு கொடுத்துள்ளார். அந்த குழம்பு வழக்கத்திற்கு மாறாக வாசனை இருந்ததால் சுரேஷ் சாப்பிடவில்லை.
கடந்த 17ஆம் தேதி மௌனிகா பிபி மற்றும் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக மதுவில் கலந்து சுரேஷுக்கு கொடுத்தார். அவர் மயங்கியதும் உடலை தூக்கில் தொங்க விட்டார். பின்னர் சடலத்தை கீழே இறக்கி உடலுறவில் இருந்த போது இறந்து விட்டதாக நாடகமாடியுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
மௌனிகா தனது கள்ளக்காதலன் உள்ளிட்ட 6 பேருடன் இணைந்து சுரேஷை கொலை செய்துவிட்டு உடலுறவில் இருந்த போது மயங்கி விழுந்து இறந்ததாக கூறி நாடகம் ஆடியது உறுதியானது. இந்த வழக்கில் மௌனிகா அஜய் இவர்களுக்கு உடந்தையாக இருந்த தேவதாஸ், சந்தியா உள்பட ஆறு பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
