தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. இதனிடையே அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலைமை மாறி விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே கரூர் விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக ஆட்சித்து வருகின்றன. ஆனால் விஜய் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலின் தோல்விக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தாலும் அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இதனால் இபிஎஸ் இன் தலைமை கேள்விக்குள்ளாகலாம். இதனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. தற்போது அதிமுக விஜய்யை நம்பியே இருப்பதாக கூறப்படுகிறது. விஜயின் ஆதரவு இபிஎஸ்-க்கு ஒரு பெரிய முன்னேற்றமாக அமையலாம். பாமக, தேமுதிக இன்னும் முடிவெடுக்காத நிலையில் விஜய் கட்சித் தவிர அதிமுகவுக்கு வேறு ஆப்ஷன் எதுவும் இல்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்கூறி வருகிறார்கள்.
