பயங்கர அதிர்ச்சி… நடுரோட்டில் பெண்ணின் விரல்களை துண்டித்து தங்க நகையை கொள்ளை அடித்த திருடர்கள்… பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சி…!

By Nanthini on ஐப்பசி 19, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடுரோட்டில் பெண்ணிடமிருந்து தங்கு சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டு அறிவாளால் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஷா மற்றும் வரலட்சுமி என்ற இரண்டு பெண்கள் விநாயகர் சதுர்த்தி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கடந்த மாதம் இறுதியில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது பிரவீன் மற்றும் யோகானந்தா என்ற இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அவர்கள் அணிந்திருந்த தங்க சங்கிலிகளை பறிக்க முயன்றனர்.

பயந்து போன உஷா தன்னுடைய சங்கிலியை கொடுத்த நிலையில் வரலட்சுமி எதிர்த்தபோது யோகானந்தா கையில் வைத்திருந்த அறிவாளால் அவரை தாக்கி அவருடைய கையின் இரண்டு விரல்களை துண்டித்துள்ளார். மொத்தம் 55 கிராம் தங்க நகைகளுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். போலீசார் அவர்களை பல வாரங்களாக தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.