போடு ரகிட ரகிட…. இனி Whatsappல் இந்த தொல்லை இல்லை… புது அப்டேட்….!

By Nanthini on ஐப்பசி 19, 2025

Spread the love

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் மக்களின் பொழுதுபோக்கு செயலிகளில் முக்கிய அங்கம் வகிப்பது whatsapp. இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் whatsapp-ல் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் whatsapp-ல் நிறைய Ad மெசேஜ் வருகிறதா? இனி இந்த தொல்லையை தீர்க்கும் நோக்கத்தில் whatsapp தற்போது புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இதில் நீங்கள் ரிப்ளை செய்யாமல் வைத்திருக்கும் நபர் அல்லது நிறுவனங்களை whatsapp நிறுவனம் கண்காணிக்கும். பிறகு உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியாமல் அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும். கூடிய விரைவில் இந்த அப்டேட் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.