சென்னை துரைப்பாக்கம் எழில் நகர் மக்களின் இன்றைய அவல நிலை குறித்து அறப்போர் இயக்கம் ஒரு செய்தியை வீடியோவுடன் இணைத்து வெளியிட்டுள்ளது. அதில், இதுதான் துரைப்பாக்கம் எழில் நகர் மக்களின் இன்றைய அவல நிலை. எங்கெங்கோ வீடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த அவர்களை வலுக்கட்டாயமாக இவ்வளவு குறைகள் நிறைந்து அடுக்குமாடி கட்டிடத்தில் விட்டுவிட்டனர். ஏகப்பட்ட வீடுகள் உள்ளது. எங்களால் ஒவ்வொரு இடமாகத் தான் சரி செய்ய முடியும் என்றும் அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அது எப்படி சரியான ஆட்சி முறையாக இருக்க முடியும்? மழைக்காலம் வருகிறது என்று தெரிந்தும் சரியான திட்டமிடல் எதுவும் இல்லாமல் எழில் நகர் 11ஆம் பிளாக்கில் cool tiles போடுவதற்காக மொட்டை மாடியில் தரையை மொத்தமாக பெயர்த்து எடுத்து விட்டாகிவிட்டது. அடுத்த வேலை தொடங்குவதற்கு முன்பாக மழை வந்துவிட்டது.
இந்த குடியிருப்புகளின் கட்டுமானம் தரமாக இல்லாமல் மோசமாக உள்ளது. தண்ணீர் சுவர் வழியாக கசிந்தும் ஒவ்வொரு மாடியில் உள்ள முற்றம் வழியாக கொட்டியும் மக்களுக்கு மிகுந்த சிரமத்தை தருகிறது. சிலரின் வீடுகளுக்கு உள்ளே தண்ணீர் புகுந்து விட்டது. இவ்வளவு அவலங்களுக்கு இடையே இது குறித்து குறைதீர்க்கும் சங்கம் நடத்துபவரிடம் புகார் அளித்த போது இது போன்ற பதிவுகளை குறிப்பிட்ட ஒரு whatsapp குழுவில் அனுப்பக்கூடாது என்றும் இதுபோல இனி அனுப்பினால் போலீசில் புகார் அளித்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கிறார்.
இவர்கள் யாராவது இங்கு வந்து பணி முடியும் 6 மாத காலம் வரை தங்கி வழிந்து கொண்டே இருக்கும் தண்ணியை அப்புறப்படுத்திக் கொண்டே இருப்பார்களா. மக்களின் இந்த நிலையை நீங்களே பாருங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று வசனம் மட்டும் பேசிக்கொண்டு மக்களை இவ்வளவு மோசமான நிலையில் வைத்திருக்கிறது TNUHDB என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதான் துரைப்பாக்கம் எழில் நகர் மக்களின் இன்றைய அவல நிலை. எங்கெங்கோ வீடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக இவ்வளவு குறைகள் நிறைந்த அடுக்குமாடி கட்டடத்தில் குடி பெயர்த்து விட்டு,”ஏகப்பட்ட வீடுகள் உள்ளன, எங்களால் ஒவ்வொரு இடமாகத்தான் சரி செய்ய முடியும்” என்றும், “அது… pic.twitter.com/CgDn4ZXWUI
— Arappor Iyakkam (@Arappor) October 18, 2025
