இனி 7 நிமிடம் இல்ல 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே… மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை என்பது பொதுமக்களின் பொது போக்குவரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. நாளுக்கு நாள் ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர மெட்ரோ ரயில் என்பது பலருக்கும் உதவியாக உள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக பயண நேரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பராமரிப்பு பணி காரணமாக அக்டோபர் 20 முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை காலை 5 மணி முதல் 6.30 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரம் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மெட்ரோ ரயில்கள் காலை ஐந்து மணி முதல் 6.30 மணி வரை வழக்கமான ஏழு நிமிட இடைவேளைக்கு பதிலாக 14 நிமிட இடைவேளியில் இயக்கப்படும். காலை 6.30 மணிக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல எந்த வித மாற்றமும் இல்லாமல் இயங்கும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவிக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.