காலையிலேயே ஷாக்… அதிமுகவுடன் கூட்டணி கிடையாது… அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளுக்கு தாவி வருகின்றன. அதே சமயம் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் இபிஎஸ்சை முதல்வர் ஆக்குவோம் என்ற நயினாரின் விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக கூட்டணி துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமல்லாமல் வரும் தேர்தலில் வெற்றி கூட்டணியாகவும் அமையும் என்று தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் இணைந்து இபிஎஸ்ஐ வீழ்த்துவோம் என்று கூறினார். இதன் மூலம் NDA கூட்டணியில் அமமுக இடம்பெறாது என்பதையும் உறுதி செய்துள்ளார்.