விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்வதாக பெங்களூர் புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “அதிமுகவில் ஒற்றுமைக்காக அனைவரும் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்காவிட்டால் தொண்டர்கள் மத்தியில் புரட்சி வெடிக்கும்.
எடப்பாடி பழனிசாமி தூக்கி எறியப்படுவார். விஜய்யின் கால் கிடைக்குமா? அதில் விழுந்துவிடலாமா? என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்” என பெங்களூர் புகழேந்தி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
