குஜராத்தில் 16 அமைச்சர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக CM பூபேந்திர படேலிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே முதல்வர் பூபேந்திர படேல் இன்று இரவு ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். புதிய அமைச்சரவையில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
