இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கூறியதாவது, தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. இது தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் இயல்பை விட வடகிழக்கு பருவ மழை அதிகமாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் கன மழை பதிவான நிலையில் அதிகபட்சமாக நாகப்பட்டணம், திருச்செந்தூரில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரி கடல் அருகே வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வருகிற 18-ஆம் தேதி கேரளா கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. வருகிற 24-ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு வட மேற்கு திசையில் நகரும். எத்தனை புயல் உருவாகும் என்பதை இப்போது கூற முடியாது. தமிழ்நாட்டில் அநேக இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும். ஐந்து நாட்களுக்கு தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையை பொருத்தவரை நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
