புதிய ஆட்டோ வாங்கிய தந்தை… குழந்தைகளை சவாரி கூட்டிச்சென்ற போது கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த மகள்… நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 16, 2025

Spread the love

திருச்சியில் நடந்த ஒரு துயரமான விபத்து ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மன்னச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர் சமீபத்தில் புதிய ஆட்டோ ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இவருக்கு கிரேசிகா (9) என்ற மகளும் லிதன் ராம் (7) என்ற மகனும் உள்ளனர். கிரேசிகா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகின்றார். இதனிடையே நேற்று புதிய ஆட்டோவில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சுற்றி காட்ட சென்றபோது வெள்ளக்குளம் பகுதியில் திடீரென்று ஆட்டோவின் கட்டுப்பாடு இழந்தது. இதனால் ஆட்டோ கவிழ்ந்து ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில் சிறுமி கிரேசிகா சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். ராஜ்குமாரும் அவருடைய மகனும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.