இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 3 போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விளையாட உள்ளது. வருகிற 19 ஆம் தேதி தொடங்கும் ஒரு நாள் தொடரை முன்னிட்டு ஆஸ்திரேலியாவின் காயோ ஸ்போர்ட்ஸ் என்ற ஓடிடி தளம் ஒரு விளம்பர வீடியோவை ரிலீஸ் செய்தது .அந்த வீடியோவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வை கிண்டல் செய்யும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளது.
வர்ணனையாளர் இயன் ஹிக்கின்ஸ் இந்த வீரர்களின் மிகப்பெரிய பலவீனம் என்று கூறி கை கொடுக்காத விஷயத்தை கூறினார். ஆஸ்திரேலிய வீரர்களான ஜோஸ் ஹேசில்வுட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், சோபி மோலினக்ஸ் ஆகியோர் கை குலுக்களுக்கு பதிலாக என்னென்ன வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் என்று தங்களது பாணியில் செய்து காட்டுகின்றனர்.
இதில் ஆஸ்திரேலியா மகளிர் அணி வீராங்கனை ஆன சோபி மோலினக்ஸ் இரண்டு நடுவிரல்களையும் கேமரா நோக்கி காட்டி ஒரு இத்தாலிய சைகையை காண்பித்தார். அது மோசமான சைகை ஆகும். அவர்கள் கைகுலுக்காமல் இந்திய அணிக்கு வித்தியாசமான வரவேற்பு அளிக்கலாம் என கூறினர். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஆஸ்திரேலிய வீரர்களின் செயலை கடுமையாக கண்டித்து பதிவு செய்தனர். பெரும் சர்ச்சைக்கு பிறகு அந்த ஓடிடி தளம் வீடியோவை டெலிட் செய்தது.
Mind games before the first ball. 🇮🇳🇦🇺🔥
Australian cricketers appear in a now-deleted Kayo Sports video mocking India’s handshake snub with Pakistan — reigniting tensions ahead of the white-ball series.
👉 Deleted after backlash
👉 Marsh, Hazlewood, Molineux featured
👉 BCCI… pic.twitter.com/1WTgG6lJE9— cricexec (@cricexec) October 16, 2025
