விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விஜய் கட்சிக்கு செல்பவர்கள் கொள்கையற்ற பதர்கள் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் தேர்தல் நீதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம் நம்மை சீண்டி பார்க்கின்றனர். ஆனால் நம்மை குறைத்து மதிப்பிடக் கூடாது. சராசரி அரசியல்வாதிகளைப் போல நம்மை விமர்சனம் செய்கின்றனர். எனது அருமை தோழர்களே, நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கியதும் சமூக ஊடகங்களில் என்ன பேசுகிறார்கள் என்றால் தலித்துகள் பெருவாரியாக அவர் பக்கம் போகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
ஒருவேளை அவர்கள் அப்படி போனால் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்றுதான் கூற வேண்டும். கொள்கை இல்லா பதர்கள் என்றுதான் பொருள். கொள்கை புரிதல் இல்லாத பதர்கள் என்று பொருள். பதர்கள் போகிறது என்பதற்காக எந்த விவசாயியாவது கவலை கொள்வானா? விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட்டு வெளியே போகிற ஒருவர் கொள்கை ரீதியான திருமாவளவனை விமர்சிக்கிற வலிமை உள்ளவனாக ஒருபோதும் இருக்க மாட்டான். அதற்கு வாய்ப்பே இல்லை. ஓரிருவர் மீது நடவடிக்கை எடுத்த போது அவர்கள் சங்கராச்சாரியார் இடம் போய் அப்படியே பாஜகவில் சேர்ந்து ஆர்எஸ்எஸ் சங்கிகளாக மாறிவிட்டனர்.
என் மீது நம்பிக்கை வைத்த என் உயிரினும் உயிரான விடுதலை சிறுத்தைகள் புரட்சியாளர் அம்பேத்கரை தலைமையாக ஏற்றுக் கொண்டவர்கள். திருமாவளவனை அண்ணனாகவும் புரட்சியாளர் அம்பேத்கரை தலைவனாகவும் ஏற்றுக்கொண்டவர்கள். அவர்கள் தான் என்னோடு களத்தில் நிற்கின்றனர். பல பேர் பறையர் என்ற பெயரில் இயக்கம் வைத்துக் கொண்டு வருவான். அந்த நாய்களை செருப்பை கழட்டி அடியுங்கள் என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார்.
