இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வெளியாகி உள்ளது. இன்றைய காலத்து இளம் தலைமுறையினர் எந்த விஷயத்தையும் சாதாரணமாக கையாளுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அலட்சியப் போக்கு என்பதும் அதிகமாகவே உள்ளது. தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் ஒரு பெண் மெட்ரோ ரயில் நிலையத்தில் காதில் ஹெட்போன் அணிந்து கொண்டு நடந்து செல்கிறார்.
அப்போது எதிரே வேகமாக வரும் ரயிலின் சத்தத்தை கூட அவர் கவனிக்கவில்லை. இதனால் தவறுதலாக ரயில் பாதையில் நேருக்கு நேர் நின்றுவிட்டார். இந்த தருணம் ஒரு நொடி மரண பயத்தை காட்டியது. உடனே அந்தப் பெண்ணின் அருகில் இருந்த ஒரு செக்யூரிட்டி காவலர் மிகுந்த தைரியம் காட்டி சில வினாடிகளில் நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணை மேலே இழுத்தார். இதனால் அவர் நொடிப் பொழுதில் உயிர் தப்பினார். ரயில் சில்லாடி தூரத்தில் வந்திருந்தது என்பதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
कान में हेडफोन की वजह से अभी जान चली जाती 👇 pic.twitter.com/wMG5tQ9wiC
— Md Ashfaque Alam (@ashfaque80035) October 14, 2025
