இரண்டு பேருந்துகளுக்கு நடுவே நசுங்கி கீழே விழுந்த இளைஞர்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்… காண்போரை பதற வைக்கும் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு இளைஞரின் அசாதாரண செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில் இளைஞர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது ஏற்கனவே ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிர் திசையில் மற்றொரு பேருந்து வந்துள்ளது.

இதனால் இரண்டு பேருந்துகளுக்கும் நடுவே அந்த இளைஞர் சிக்கிக்கொண்டார். திடிரென்று இரண்டு பேருந்துகளும் அவரை மோதியதால் அவர் கீழே விழுந்தார். இரண்டு பேருந்துகளும் அவரை இடித்தும் அந்த இளைஞருக்கு எந்த காயமும் ஏற்படாதது தான் மிகப்பெரிய ஆச்சரியம். உடனே அவர் தன்னால் எழுந்து அமைதியாக அங்கிருந்து சென்று விட்டார். இந்த காட்சியை கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இப்படி ஒரு விபத்திலும் உயிர் தப்பியது அதிர்ஷ்டம்தான் என பலரும் கூறி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ பெருமளவு இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.