RTE கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களுடைய விவரங்களை வரும் 31-ம் தேதிக்குள் சமர்பிக்க, தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. வரும் 17-ம் தேதிக்குள் விவரங்களை சமர்பிக்க தனியார் பள்ளிகளின் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், அதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் உள்ள 80 ஆயிரம் இடங்களுக்கு 82 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
