தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பாஜகவின் கை பாவை ஆகிவிட்டார் என்று முரசொலி விமர்சித்துள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இன்றைய தலையங்கத்தில், மடப்புரம் காவலாளி அஜித் வழக்கில் சிபிஐ விசாரணை எதற்கு என்று கேட்டவர் இன்று கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு வரவேற்பு தெரிவிக்கிறார். சாடிஸ்ட் மனிதனின் விளம்பர பசிக்கு 41 உயிர்களா? என்று விமர்சித்துள்ளது. கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி விஜய் பரப்புரை செய்த போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
