கரூரில் செப்., 27ஆம் தேதி விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து பலரும் விமர்சித்தும், ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள். இந்நிலையில் TVK தலைவர் விஜய் பாஜகவின் கைப்பாவை ஆகிவிட்டார் என்று முரசொலி விமர்சனம் செய்துள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியின் இன்றைய தலையங்கத்தில், மடப்புரம் காவலாளி அஜித் வழக்கில் சிபிஐ விசாரணை எதற்கு? என்று கேட்டவர், இன்று கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு வரவேற்பு தெரிவிக்கிறார். சேடிஸ்ட் மனிதனின்(விஜய்) விளம்பரப் பசிக்கு 41 உயிர்களா? என்று விமர்சனம் செய்துள்ளது.
