20 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரம்…! கதறி அழுத மூதாட்டிக்கு சிறிய சர்ப்பிரைஸ்…. கிராம மக்கள் நெகிழ்ச்சி…!!

By Devi Ramu on ஐப்பசி 15, 2025

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவ்லா பாய் பட்டேல் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூதாட்டி நட்டு வைத்த அரச மரத்தில் பொதுமக்கள் சுவாமி சிலை வைத்து வழிபட்டு வந்தனர். தற்போது அந்த இடத்தை வாங்கிய நபர் அரச மரத்தை வெட்டினார். இதனை பார்த்த மூதாட்டி மரத்தடியில் அமர்ந்து கதறி அழுத வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது.

இதனையடுத்து கிராம மக்கள் மரம் வெட்டப்பட்ட இடத்தில் சிறப்பு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் மூதாட்டிக்கு ஆறுதல் கூறி ஒரு புதிய மரக்கன்று கொடுத்துள்ளனர். அந்த மரக்கன்று மூதாட்டி வெட்டப்பட்ட மரம் அருகே நட வைத்துள்ளனர். அந்த பகுதி எம்எல்ஏ யசோதா மூதாட்டிக்கு ருத்ராட்சம் மரக்கன்று கொடுத்து நட வைத்தார்.