பொதுவாகவே தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்துகள் அதிகமாக கட்டணம் வசூலிப்பது வழக்கம். அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.
அதாவது ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் சிவசங்கர் அதிரடியால் தற்போது கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரைக்கு 4000 ரூபாயாக இருந்த கட்டணம் 2600 ஆகவும், நெல்லைக்கு ஐந்தாயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் 2000 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, திருச்சி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் 1500 ரூபாய் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
