சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே சாந்திக்கும் அவருடைய கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அப்போது சாந்தி வேறொரு நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன்னுடைய மகளுடன் வேலூரில் தங்கி பணியாற்றினார். இப்படியான நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்தியின் முதல் கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவரைப் பார்த்துக் கொள்ள சாந்தி தன்னுடைய மகளை அவரது அத்தை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அப்போது சிறுமி பார்ட் டைம் வேலை வாங்கித் தருமாறு அவருடைய அத்தை இடம் கேட்டுள்ளார்.
இதனிடையே அவருடைய அத்தை துணி எடுத்து தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி ஈசிஆரில் உள்ள ஒரு வீட்டுக்கு வலுக்கட்டாயமாக சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அதே போல சிறுமியின் அத்தை சிறுமியை மேலும் இரண்டு முறை அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று ஸ்ரீக்கு இறையாக்கினார். அது மட்டுமல்லாமல் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதில் பயந்த சிறுமி தன்னுடைய அம்மாவுடன் சென்று வாழ்ந்து வந்த நிலையில் தனக்கு நடந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறுமி அவருடைய பாட்டியின் துக்க நிகழ்வுக்கு கோடம்பாக்கத்திற்கு சென்ற போது அவருடைய அத்தை சொத்துக்காக வந்தியா என்று சிறுமியிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் உன்னை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ என்னிடம் இருக்கிறது அதனை சமூக ஊடகத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி உடனே போலீசில் புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியின் அத்தை மற்றும் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ மீது ஏற்கனவே தொழிலதிபரை கடத்திய நில அபகரிப்பு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதுடன் மேலும் சில போக்சோ வழக்குகளும் உள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிடப்பியுள்ள நிலையில் போலீஸ் ஆர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
