இனி இவர்களுக்கு ரூ.2000 கிடையாது… அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு… உடனே இதை பண்ணுங்க…!

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 20 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 21ஆவது தவணைத்தொகை எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் 21ஆவது தவணைத் தொகை இமாச்சல், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது. தமிழக உள்ளிட்ட மற்ற மாநில விவசாயிகளுக்கு வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் விவசாயிகள் தீபாவளியை கொண்டாட உதவும் வகையில் 2000 ரூபாய் தவணைத்தொகை இன்னும் முன்கூட்டியே வரும் வாரத்தில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

   

இந்நிலையில் தமிழகத்தில் இந்த உதவித்தொகை பெற தனித்துவ விவசாய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனித்துவ விவசாய அடையாள அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பித்த உடனடியாக பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.