மக்களே, தீபாவளிக்கு ஆன்லைனில் பட்டாசு வாங்க போறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… சைபர் கிரைம் எச்சரிக்கை ..!

By Nanthini on ஐப்பசி 14, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் மோசடிக்காரர்கள் புதுவித யுத்தியை கையாண்டு வருகிறார்கள்.

அதாவது பண்டிகை காலத்தை பயன்படுத்தி மோசடி செயல்கள் அரங்கேறுகிறது. சலுகை விலை, கூடுதல் பரிசுகள், வீட்டுக்கான பொருட்கள் என மக்களின் கவனம் ஈர்க்கப்படுகின்றது. பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போல இணையதளம் மற்றும் இணைய பக்கங்கள் உருவாக்கப்பட்டு மோசடி தொடர்கிறது. இணையவழி விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்த வேண்டாம் என்றும் Cash on Delivery தேர்வு செய்வது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் நிலைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். பணத்தை இழந்தவர்கள் 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பணத்தை மீட்கும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.