தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பது என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணம். தீபாவளி பண்டிகை குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியான காலம் என்றாலும் அதிக எச்சரிக்கையோடும், பாதுகாப்பும் தேவைப்படும் காலம். எனவே குழந்தைகள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஹெரா லிங்க் இண்டர் நேஷனல் எனும் நிறுவனத்தோடு ஒருங்கிணைந்து தாலுகா அலுவலகங்கள் மூலமாக 20000 குழந்தைகளுக்கு பாதுகாப்பு கண்கண்ணாடி வழங்கஉள்ளது.
மேலும் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கூட்டுறவு துறை மூலமாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த செயலின் மூலமாக மக்கள் அனைவரும் அதிக விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுவார்கள்.
