கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் விரைவில் சந்திக்க உள்ள நிலையில், N.ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை விஜய் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுவானது உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வேலுச்சாமி புரத்திற்கு அழைத்துவர ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.மேலும், அவர்களுக்கான உணவு, பஸ் உள்ளிட்ட வசதிகளையும் தவெக ஏற்பாடு செய்ய உள்ளதாம்.
